இங்கு இருந்து அங்கு போய் உழைப்பதை விட இங்கு இருந்து, இங்கு உழைப்பது மேல். நான் கண்ட பல மேதவிகள் எனக்குக் கூறியது இங்கு இனப்பிரச்னை, மொழிப்பிரச்சனை. ஆனால் அவர்கள் அங்கு சென்று அந்த நாட்டு மொழியைக் கற்பதை விட இங்கு இருந்து நம் சகோதர மொழியைக் கற்று சிறப்படைவதே மேல். இதை நான் இங்கு சென்னால் எம்மவர்களுக்கு நான் விரோதி ஆகிறான்.இது மட்டும் இல்லாமல் இங்கு இருந்த நோஞ்சன்கள் அங்கு சென்றதும் வீரன் ஆகும் கதைகள் ஏராளம்.இந்த வீரன்கள் அங்குள்ள அப்பாவிகளுடன் சண்டை போட்டு மீண்டும் இங்கு வந்த கதைகளும் ஏராளம். இதை விட இங்கு இருந்து எமக்கு ஏற்ற தொழிலைச் செய்யலாம் எமது தாய் நாட்டில்.

இதை விட பெரும் கெடுமை படிக்கச் சென்ற பண்டிதர்கள் படிக்காமல் பாவைகளுடன் சென்றதும் உண்டு. இப்போற்பட்டவர்களை நம்பி இங்கிருந்து பெற்றோர்கள் பணம் அனுப்பும் படலம் வேறு நடக்கும்.
இங்கு நடைபெற்றும் மரணச்சடங்கின், பத்திரிக்கை அறிவிப்பில் போடப்படும் சகல வெளிநாடு வாழ் உறவுகளின் பெயர்களின் பின்னால் போடப்படும் நாடுகளின் பெயர்களைப் பார்க்கும் போது என மனதில் தோன்றுவது அகதி என்னப் போடுவதற்குப் பதில் நாடுகளின் பெயர்களைப் போட்டுளார்களோ என்று இதற்கு அவர்களே பதில் தரட்டும்...
முதலும் இறுதியுமாய் சகலருக்கும் ஓர் வேண்டுகோள்.
என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்,
ஏன் உடலை வருத்த வேண்டும் வெளிநாடில்....
சிந்திப்போம் செயல்படுவோம்,
பிரசன்னா.அ

No comments:
Post a Comment