Search This Blog

Tuesday, June 23, 2009

தமிழரும் மாயாஜாலமும்




தமிழருக்கும் மாயாஜாலத்திற்கும் நிறையவே தொடர்புண்டு. தமிழன் பிறந்த போதே பாட்டி வடை சுட்ட கதை முதல் விக்கிரமாதித்தன் கதை வரை மாயாஜாலத்தில் வாழ்ந்தவர்கள் எமக்கு ஹர்ரி போட்டேர் எல்லாம் யுயுப்பி...

எம் தமிழர் விக்கிரமாதித்தனின் வேதளதுடன் வளர்ந்தவர்கள் நாம் அன்று வியந்த்தைப் பார்த்து இன்று உலகம் வியக்கிறது ஹர்ரி போட்டேர் முலம். வெளிநாட்டவர்களுக்கு இது புதிதானாலும் எமக்கு பத்தோடு பதினோன்று...

இப்படியான கதைகள் முலம் தமிழர் மாயாஜாலத்துடன் மட்டும் நிற்கவில்லை அத்தோடு சேர்த்து ராஜதந்திரங்களையும் , நீதி உரைகளையும் வழங்கி விட்டுத்தான் சென்றன...

உதாரணமாக விக்கிரமாதித்தன் கதையில் கதாசிரியர் விக்கிரமாதித்தனுக்கு 1000 வருடம் ஆட்சி புரியா இறைவன் வரம் கொடுத்ததே நல்ல கதை சொல்லவே.. ஆனால் அதை புரிந்தோமா என்றால் சந்தேகமே...

அக்கதையில் வரும் நாடாறு மாதம் ,காடாறு மாத ஆட்சி என்பது நாட்டை ஆள்பவன் ஆட்சியை விட்டு வெளியே சென்றாலே அவனுக்கு நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியும்... இதனை இப்போதய புலனாய்வு என்றும் கருதலாம்.

அக்கதைகளைப் படிக்கும் போது எம்மை அறியாமல் எம்மது சிந்தனா சக்தி அதிகரிக்கிறது. இவற்றை எல்லாம் பார்த்தால் நாம் ஒரு காலத்தில் வள்ர்ச்சி அடைந்தவராய் இருந்தோம் ஆனால் தற்போதைய நிலை என்ன என்பதை நாமே சிந்திக்க வேண்டும் ...

"சிந்திப்போம் செயல்ப்படுவோம் "

பிரசன்னா

No comments:

Post a Comment